Poovum Thendral

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ?
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ?

ஒன்றை ஒன்று கூடும்
உள்ளம் மாறலாமோ?
உண்மை கண்ட யாரும்
எல்லை மீறலாமோ?

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ?
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ?

விதி யார் அறிவார்?
வினை யார் அறிவார்?
எதுதான் முடிவு?
அவன்தான் அறிவார்

மனம் என்ற மாய வீடு
புரியாத ஒன்று
விரல் மீட்டும் வீணை ஒன்று
சுதி மாறிப் பாடுது
மாறாதது மயக்கம் மயக்கம்

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ?
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ?

உலகைப் புரிந்தும்...
மனதில் மயக்கம்...
விடிந்தால் கூட...
இரவைத் தேடும்

ஒரு பாதை போன கால்கள்
திசை மாறிப் போவதேன்?
கடல் மூழ்கிப் போன ஓடம்
கரை சேரப் பார்ப்பதென்ன
யார் சொல்வதோ?
விளக்கம் விளக்கம்

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ?
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ?

ஒன்றை ஒன்று கூடும்
உள்ளம் மாறலாமோ
உண்மை கண்ட யாரும்
எல்லை மீறலாமோ

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ?
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ?



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link