Maaripocho

(மாறிபோச்சோ என்ன ஆச்சோ?)
(மாறிபோச்சோ என்ன ஆச்சோ?)

காலம் மாற எல்லாமே மாற
வானம் மாறவில்ல
என்ன சுத்தி எல்லாமே மாற
நானும் மாறல

காடு ரோடு வீடெல்லாம் வேற
காத்தில் மாத்தம் இல்ல
கண்ணு பாக்கும் எல்லாமே மாற
நீயும் மாறல

நம் ஊரா? நம் ஊரா?, வேறூரா ஆயாச்சோ?
கண்மூடி தொறந்து எல்லாமே
பறந்தே போயாச்சோ?

எல்லாமே மாறிபோயாச்சோ?
(சால மூலை சந்து பொந்து குட்டி காடா போச்சோ?)
எல்லாமே மாறிபோயாச்சோ?
(Fan'uh phone'uh சட்ட pant'uh சின்னதாகி போச்சோ?)

மாறிப்போச்சோ? என்ன ஆச்சோ?
மாறிப்போச்சோ? என்ன ஆச்சோ?

Check me out
From a young lad to a grown man
Through generations passed down we hold hands
From the past we fly fast into the future
Timings are the essence that essentially uproots us
Staring the face of clock
The battles we're handing when fighting with time
We take for the talk
Social media seeing notifications online
Stuck on the grind
Trapped in the maze
Things that we do to get paid
We claw, pushing our family away (away)

காணவில்லை நாம் என்று
தேடி செல்கிறோம் இன்று
பாலியத்தை நாம் எங்கே
தொலைத்தோம் தொலைத்தோம்
காதல் அது ஒரு தலையாய்
ஊரில் உண்டு கதை கதையாய்
பாசம் இங்கு ஒரு தலையாய்
உணர்ந்தோம் உணர்ந்தோம்

வேர்கள் மேலே வந்ததாலே
கிளைகள் மண்ணுள் போவதுண்டோ?
மேகம் கீழே வந்ததாலே
மழை தான் மேலே பாய்வதுண்டோ?

நேற்று இன்று நாளையை மாற்றினாய்
நான் இன்று நானும் இல்லை
காலத்தின் காய்ச்சலை மாற்றினாய்
ஏதும் இன்பம் இல்லை

எல்லாமே மாறிபோயாச்சோ?
(சால மூலை சந்து பொந்து குட்டி காடா போச்சோ?)
எல்லாமே மாறிபோயாச்சோ?
(Fan'uh phone'uh சட்ட pant'uh சின்னதாகி போச்சோ?)

Clock keeps on spinning
Our heads keep on turning
Life is a lesson
And I'm afraid for tryin' to learning now
Clock keeps on spinning
Our heads keep on turning
Life is a lesson
And I'm afraid for tryin' to learning now

காதல் அதை காணாமல்
காண வழி இல்லாமல்
காலம் என்னும் கூண்டுக்குள்
அடைந்தேன், உடைந்தேன்
சொல் இழந்த சத்தம் போல்
வாய் இழந்த முத்தம் போல்
மெய் இழந்த இரத்தம் போல்
கிடந்தேன் வடிந்தேன்

மூச்சு இருக்கும் நாள் வரைக்கும்
என் காதல் காதல் தீர்ந்திடாது
என்றேன் நான் உன்னை பார்ப்பேனோ
நீ யார்? என்று கேட்காது
நீ வாழும் ஊரில் நான் வாழ்கிறேன்
ஆனாலும் தூரம் ஏனோ?
எல்லாமே நான் இழந்த பின்னும்
என்னுள் பாரம் ஏனோ?

எல்லாமே மாறிபோயாச்சோ?
(சால மூலை சந்து பொந்து குட்டி காடா போச்சோ?)
எல்லாமே மாறிபோயாச்சோ?
(Fan'uh phone'uh சட்ட pant'uh சின்னதாகி போச்சோ?)

மாறிபோச்சோ? மாறிபோச்சோ?
எப்படி மாற்ற
இன்னுக்குள்ள காயங்களே
எப்படி ஆற்ற

என் முன்னே ஓர் வழியில்
பின்னே ஓர் வழி
எங்கு போகும் என் மனம் என்றது?
(மாறிபோச்சோ? மாறிபோச்சோ?)



Credits
Writer(s): Jakes Bejoy, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link