Vaan Nila

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ்தானோ

பாற்புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர்கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ

உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது

நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்
அவன் படைப்பினில் மிக சிறந்தவள்
ஓஹோஹோ ஹோ ஓஓ ஓஓ

சிலு சிலுவென விழும் புது பனி துளியோ
மழை எழுதும் முதல் கவியோ
தம் தம் தம் சங் சங்கீதம்
கொலுசோடு ஜல்
நீலம் தொயித்த
அந்த ஆகாயம்
உந்தன் மேலாடும் நூலாடையோ

(ஒரு சரம் சிரிக்கையில்
நவரசம் தெரிக்கையில்
புது புது கவிதைகள்
புறப்படும் புலப்படும்)

ரதியே ரதம்போல் நடந்தேன்
நீ வரும் வழி எங்கும்
குறுஞ்சி மலர்போல் குலுங்கும்
கூர் நெருஞ்சி முள் என்றும்

நதிக்குள் குதிக்கும் மீன்கள்
உன் நீள் விழி கண்டு
நிலத்தில் வாழும் மீனோ
என வியர்ப்பது உண்டு

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ்தானோ

பாற்புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர்கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ

தினம் தினம் மனதினில்
முதல் முகமெழுதி
ரசித்திருப்பேன் உயிர் தழுவி

காதல் தேவி என் நெஞ்சம்
உன் கோயில் தான்
காதல் என்னும் அந்த ஒர் தீபம்
எந்தன் எண்ணங்கள் ஏற்றதோ

(இடி மின்னல் மழையிலும்
அடிகின்ற புயலிலும்
உயிர் உள்ள வரையிலும்
ஒளி விடும் விளக்கிது)

என்னை தான் கணம் நீ பிரிந்தால்
நீர் விழிகளும் வார்க்கும்
உன்னைதான் வருத்தும்
அவள் யார் என இயற்கையும் கேட்கும்

பெண்ணை அழகாய் படைத்தல்
அந்த இயற்கையும் வேலை
அறிந்தும் என்னையே கேட்டால்
அட இது என்ன லீலை

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ்தானோ

பாற்புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர்கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ

உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது

நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்
அவன் படைப்பினில் மிக சிறந்தவள்
ஓஹோஹோ ஹோ ஓஓ ஓஓ



Credits
Writer(s): A R Rahman, Kavignar Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link