Mundasu Sooriyane

முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே
தேர் போல நின்னவனே

நூறு தல முறையா ஊராளும் குலமே
வீர பரம்பரைக்கு வித்தான இனமே

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா
உன் நெஞ்செடுத்து காமி

முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே
தேர் போல நின்னவனே

மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா
அட மறையாத சூரியனின் அம்சம் வருதையா
வெட்டருவா விரலிருக்கும் சிங்கம் வருதையா
எங்க தன்மானம் காத்து நிக்கும் தங்கம் வருதையா

எட்டு பட்டி சனத்துக்கும் சாமி போலடா
அய்யா நிழலு கூட சாஞ்சதுள்ள பூமி மேல டா
நீ தல குனிஞ்சு யாரும் பார்த்ததில்ல
உங்க தல நிமிர்ந்து நாங்க பார்த்ததில்ல

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா
உன் நெஞ்செடுத்து காமி

அள்ளி அள்ளி கொடுத்ததில்லே சிவந்த கையடா
இது அருவாள தூக்கி நின்ன அய்யனாருடா
கம்ப கூழு குடிக்கும் ஒரு கடவுள் ஏதடா?
அத எங்க ஊரு எல்ல குள்ள வந்து பாரடா

நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழை இல்லடா
அய்யா வாழும் மண்ணுல யாரும் இங்கே ஏழை இல்லடா
இது பரம்பரைய அள்ளி தந்த வானம்
ஏழு தலைமுறையா வாழ்ந்து வரும் மானம்

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா
உன் நெஞ்செடுத்து காமி

முண்டாசு சூரியனே
முக்குலத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே
தேர் போல நின்னவனே

நூறு தல முறையா ஊராளும் குலமே
வீர பரம்பரைக்கு வித்தான இனமே

வீச்சருவா சாமி
இது வேலு கம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா
உன் நெஞ்செடுத்து காமி



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link