Yedhu Naan Inge (From "Anel Meley Pani Thuli")

எது நான் இங்கே?
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா?
எது நான் இங்கே?
எனை நான் என்பேன்
வசைபாடும் திசைகள் நானா?

யாரோ நெய்த வேலிகள்
எனை சூழும் எண்ணங்கள்
தேரை சேற்றில் சாய்த்திடும்
பொல்லாத கோலங்கள்

எது நான் இங்கே?
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா?
எது நான் இங்கே?
எனை நான் என்பேன்
வசைபாடும் திசைகள் நானா?

தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே
தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே

மண்ணின் சுவைதான்
மரத்தின் கனியே
இலையின் அளவே
கிளையின் நிழலே

கடலென்ன சங்கில் அடங்கிடுமா?
காற்றென்ன குழலில் ஒடுங்கிடுமா?
புனிதங்கள் சுமந்தது போதும்
இங்கு புழுதிக்குள் புதைந்தது போதும்

தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே
தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே

முதுகிலே கல்லை கட்டி
மூச்சிலே சொல்லை தைத்து
ஆற்றிலே வீசினாலும்
நிமிர்ந்திடு அருவிகள் போலே
நிமிர்ந்திடு அருவிகள் போலே

கடல் தாண்டும் காற்றெல்லாம் பறக்க மறுக்காதே
காட்டாறு வெள்ளம் நீ தேம்பி நிற்காதே

தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே
தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே

எது நான் இங்கே?
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா?

உடல் தான் இங்கே
விடை தான் என்றால்
அந்த பொய்மை துறப்பேன்

தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே
தீயோடு போராடும் தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள் தீர்க்கின்ற நாளெங்கே

Credits
Writer(s): Santhosh Narayanan, Uma Devi
Lyrics powered by www.musixmatch.com

Link