Mudhal Muththam (From "Bommai")

யாரும் இல்லாத மாமலை மீது என்னோடு நீ
ஆடையில்லாத முழு நிலா ஒளியில் நனைகின்ற நான்
மேனி மேல் மோதும் காற்றினை உடைத்து தடுக்கின்ற நீ
பூமியின் மொத்த காதலை கூடிக்க துடிக்கின்ற நான்

உயிர் முழுதும் திரட்டி இதழ் மீது தீ மூட்டியே
அனைத்திடவே அழித்தேன் உன் இதழில் தேன் கொட்டியே

முத்தம் முதல் முத்தம்
அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு
முத்தம் முதல் முத்தம்
அது உயிரைப் பறிமாறும் குழலென புரிந்திடு

முத்தம் முதல் முத்தம்
அது எல்லை இல்லாத பரவசம் உணர்ந்திடு
முத்தம் முதல் முத்தம்
தரும் நாள் திருநாளடா

ஏ... யாரும் இல்லாத மாமலை மீது என்னோடு நீ
பூமியின் மொத்த காதலை கூடிக்க துடிக்கின்ற நான்

ஓர் வானம், ஓர் பூமி
ஓர் வாழ்க்கை தான் நம் முன்னே
வாய் சேர்க்க, நாள் பார்த்தால்
நாள் போதாது பெண்ணே

ஹேஹே நீ கேட்டால், ஓர் நாளில்
கொட்டும் முத்தங்கள் ஒருக் கோடி
முதல் முத்தம், அது மட்டும்
நான் கேட்கும் படி

43 வகை முத்தம் கலைகளில் மொத்தம்
நீ எதைக் கேட்கிறாய்?
அழுத்திடும் வன்மை வகை முத்தம்
மென்மை வகை முத்தம் என்னெதிர் பார்க்கிறாய்?

இரவெல்லாம் நுனி நாவை நாவிலே
மனப்பாடம் செய்யலாம்
இதழ் கோர்க்கும் நீரின் நூலில் ஆடை நெய்யலாம்

முத்தம் முதல் முத்தம்
அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு
முத்தம் முதல் முத்தம்
அது உயிரைப் பறிமாறும் குழலென புரிந்திடு

முத்தம் முதல் முத்தம்
அது எல்லை இல்லாத பரவசம் உணர்ந்திடு
முத்தம் முதல் முத்தம்
தரும் நாள் திருநாளம்மா



Credits
Writer(s): Karky, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link