Dumm Dumm

டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்

டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்

மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்

கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்

டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்

காலம் வர உனக்காக வந்துட்டா
பாத்துக்கணும் மகராசியா
ஆசையெல்லாம் உனக்காக மாத்திப்பான்
வாழ வையி மகராசனா

அவன் கவலைய
கலைக்க தெரிஞ்சவ
அவன ஜெயிக்கிறா, oh

அவளிடம் தோற்க்க தெரிஞ்சவன்
உலகம் ஜெயிக்கிறான், oh-oh-oh

டும்ம் டும்ம் hey
டும்ம் டும்ம் ah

டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்

டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்

மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்

கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்

Oh-oh, ஆசையா இளமை மயக்கத்தில்
முத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்
நாற்பது வருஷம் கடந்தாபோதும்
கைய பிடிப்பதில் காதல் இருக்கணும்

வருஷ கணக்கா
அழகு சண்ட போட்டு
நெஞ்ச புரிஞ்சிக்க தொடங்கும்
கணக்கில் எடுத்த
உறவில் எதுனாலும்
இந்த உறவுல அடங்கும்

உன்னோட உன்னோட
உயிருக்கு காவலா
இன்னொரு நெஞ்சமும் துடி துடிக்கும்

மண்மேல வாழ்த்திட
உனக்கு ஒரு காரணம்
உண்டாக்கி கல்யாணம் பரிசளிக்கும்

டும்ம் டும்ம் டேய்
டும்ம் டும்ம் போடு

டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கெட்டி மேளம் தலையாட்டும்
நல்ல சத்தம் மட்டும் பரவட்டும்

டும்ம் டும்ம் டும்ம் டும்ம்
கட்டி அதிருது வேட்டும்
நம்ம கல்யாணம் கல கட்டும்

Hey மாப்பிள்ளை பொண்ணோட வலியுற வேளையில்
சொந்தங்கள் சொல்லாமல் மறைஞ்சிருக்கும்
Hey கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல
சந்தோசம் காத்தோடு நிறைஞ்சிருக்கும்

புள்ளைங்களா புருஷன்
பொண்டாட்டியா இல்லாம
நண்பர்களா இருந்தீங்கனா
வாழ்க்கை நல்லா இருக்கும்

போடு



Credits
Writer(s): Anirudh Ravichander, Vivek Velmurugan
Lyrics powered by www.musixmatch.com

Link