Aga Naga

அகநக அகநக
முகநகையே-ஹோ
முகநக முகநக
முருநகையே-ஹோ

முறுநக முறுநக
தருநகையே-ஹோ
தருநக தருநக
வருநனையே!

யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது

நடை பழகிடும்
தொலை அருவிகளே-ஹோ
முகில் குடித்திடும்
மலை முகடுகளே-ஹோ

குடை பிடித்திடும்
நெடு மர செறிவே
பனி உதிர்த்திடும்
சிறு மலர் துளியே

அழகிய புலமே
உனத்திள மகள் நான்
வளவனின் நிலமே
என தரசியும் நீ

வளநில சிரிப்பே
எனதுயிரடியோ
உனதிளம் வனப்பே
எனக்கினிதடியோ!
உனை நினைக்கையிலே
மனம் சிலிர்த்திடுதே!

உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால்
தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே

அகநக அகநக
முகநகையே-ஹோ
முகநக முகநக
முருநகையே-ஹோ

முறுநக முறுநக
தருநகையே-ஹோ
தருநக தருநக
வருநனையே!

யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது

யாரது யாரது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது



Credits
Writer(s): A.r. Rahman, Ilango Krishnan
Lyrics powered by www.musixmatch.com

Link