Kanna Nee Thoongadaa (From "Baahubali 2 - The Conclusion")

முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா

பூவையர் மீது கண்
மேய்வது முறையா
பாவை என் நெஞ்சம்
தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம்
துயில் கொள்ளடா

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

உன் விரலினில் மலை
சுமந்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

உன் இதழ் இனி குழல்
இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

கோபியர் குளிக்கையிலே
உடைகள் திருடி கலைத்தாய்
ஓய்வெடு மாயவனே

பானையில் வெண்ணையினை
தினமும் திருடி இழைத்தாய்
தூங்கிடு தூயவனே

சா... மனா
மோ... கனா
போதும் கண்ணா
நீ செய்யும் திருட்டு
வானம் எங்கும்
சூழ்ந்தது இருட்டு
மார்பில் சாய்ந்து
கண் மூடடா

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

சோலையின் நடுவினிலே
நுழைந்தேன் அலைந்தேன் துளைந்தேன்
நான் உனதருகினிலே
கானகம் நடுவினிலே
மயங்கி கிறங்கி கிடைத்தேன்
நான் உனதழகினிலே

மாதவா
யாதவா

லீலை செய்து
என்னை நீ கவிழ்க
காலை மோதி
உன்னையும் கவிழ்க
காயம் என்னால் கொண்டாயடா

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

முறைதானா முகுந்தா
சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா
சரிதானா சனந்தா

மதனா மதுசூதனா
மனோஹர மன்மோஹனா
மதனா மதுசூதனா
மனோஹர மன்மோஹனா

முறைதானா முகுந்தா
கண்ணா
சரிதானா சனந்தா
ஆனந்தா அனிருத்தா

கண்ணா
ஆனந்தா அனிருத்தா
கண்ணா
கண்ணா
கண்ணா
ராதா ரமணா, ராதா ரமணா
கண்ணா நீ தூங்கடா



Credits
Writer(s): Maragadamani, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link