Mudhal Kaadhal

காற்றினில் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல்

பகல் இரவாக சுழலுகிறேனே
நெருங்கிடும் நேரம் நீ
ஒரு நிழலாக நெருங்குகிறேனே
இருந்துமே தூரம் நீ

அடி யாருமே, அறியாமலே
பறி போனதே மனமே
உயிர் வாழவே, இடம் வேண்டுமே
உன் நெஞ்சில் எனக்கும்

என் கண்ணே, என்ன தொலச்சேன்?
உன் ஒய்யார புன்னகையில் கண்டு புடிச்சேன்
என் பெண்ணே உன்ன நெனச்சேன்
உன் கள்ளூரும் கண்ணசைவில் என்ன தொலச்சேன்

காற்றினில் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல் (என் கண்ணே)
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல் (என் பெண்ணே)

யாரது?, யாரது?
காலத்தின் காட்டில் தொலைவது
நீர் எது?, தீ எது?
காதலில் நீ எது?, நான் எது?

நல்லிரவின் நிலவும் நீ எனில்
உன் தெரியா முகமும் நான் அதில்
முதல் மீசையும், முதல் காதலும்
அரியமாலே முளைக்கும்
அது போலவே, நம் காதலின்
அடையாளம் இருக்கும்

என் கண்ணே, என்ன தொலச்சேன்?
உன் ஒய்யார புன்னகையில் கண்டு புடிச்சேன்
என் பெண்ணே உன்ன நானும் நெனச்சேன்
உன் கள்ளூரும் கண்ணசைவில் என்ன தொலச்சேன்

காற்றினில் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல் (என் கண்ணே)
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல் (என் பெண்ணே)



Credits
Writer(s): Bagavathy P K, Justin Prabhakaran
Lyrics powered by www.musixmatch.com

Link