Kadavulukku Korikkai

விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்

மழைமேகம் என் மனதில்
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்
மழைமேகம் என் மனதில்
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்

விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்

உள்ளச் சிறுமை அகல
உன் கருணை கொஞ்சம் வேண்டும்
கண்ணில் களங்கம் விலக
உன் கண்ணியம் கொஞ்சம் வேண்டும்

உள்ளச் சிறுமை அகல
உன் கருணை கொஞ்சம் வேண்டும்
கண்ணில் களங்கம் விலக
உன் கண்ணியம் கொஞ்சம் வேண்டும்

மடமை குழைத்து விதி செய்யும்
மனிதரை கரையில் இறக்கிவிடு
கயமை இழைத்து பழி செய்யும்
மனிதரின் அறிவில் தெளிவு கொடு
மனிதரின் அறிவில் தெளிவு கொடு

விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்

தீமை எதிரில் நிற்க
என் தோளில் உறுதி வேண்டும்
பாவம் செய்யாதிருக்க
உன் தூய்மை கொஞ்சம் வேண்டும்

தீமை எதிரில் நிற்க
என் தோளில் உறுதி வேண்டும்
பாவம் செய்யாதிருக்க
உன் தூய்மை கொஞ்சம் வேண்டும்

தரும் மறந்த மூடருக்கு
புண்ணியம் செய்வதை குறைத்து விடு
சத்தியம் சுமக்கும் மாந்தருக்கு
தண்டனை கொடுப்பதை நிறுத்திவிடு
தண்டனை கொடுப்பதை நிறுத்திவிடு

விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்

கீழ்மை பேயை விரட்ட
உன் சாட்டை மீதி வேண்டும்
சோகம் எதையும் சுமக்க
உன் சிலுவை பாதி வேண்டும்

கீழ்மை பேயை விரட்ட
உன் சாட்டை மீதி வேண்டும்
சோகம் எதையும் சுமக்க
உன் சிலுவை பாதி வேண்டும்

பேதம் தூண்டும் மனிதருக்கு
நரக வாசலை காட்டிவிடு
மனிதம் தழுவும் புனிதருக்கு
உன் சொர்க்க கதவை திறந்து விடு
சொர்க்க கதவை திறந்து விடு

விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்

மழைமேகம் என் மனதில்
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்
மழைமேகம் என் மனதில்
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்

விடியல் தேடும் மனிதருக்கு
நீ ஒளி தருவாய்
மடியில் தாங்கும் மன்னிப்பை
நீ போற்றிடுவாய்



Credits
Writer(s): Mysskin
Lyrics powered by www.musixmatch.com

Link