Lullaby Song - Rajkumari (From "Vikrant Rona")

தென்றலே லாலி லாலி
பாடுதே ஜோ ஜோ லாலி
தென்றலே லாலி லாலி
பாடுதே ஜோ ஜோ லாலி
செவ்வந்திப் பூவே எந்தன் செல்லம் நீதானே, செல்லம் நீதானே
வெண்ணிலாவும் மேகத்தோடு தூங்கும் அழகிலே
முத்துமணி சிந்துதடி பூவின் மடியிலே
வெண்ணிலா வெளிச்சத்திலே தூங்கு என் ராசக்குமாரி
கனவின் குதிரை ஏறி போவோம் சவாரி, நாம் போவோம் சவாரி

அச்சமென்ன கண்ணே நீ ஏன், அழுதாய்?
என்றும் உனக்கு நான் இருப்பேன் துணையாய்
ஓடி வந்து உன்னை அள்ளி கொள்வேன்
போகாதிரு நீ எங்கேயும் தனியாய்

இருளுக்கு ஒளியை தரும் புன்னகையின் அழகு முகம்
தீபம் ஏற்றும் எந்தன் உயிரிலே
மேகங்களின் அன்பு மழையாக கரையுதே
பூ மரங்கள் யாவும் குஷியாக குளிக்குதே

தாலாட்டும் காற்று வந்து
தேவதையின் கதையை சொல்ல
கேட்கும் அந்த பூக்கள் எல்லாம்
உன்னைக் கொண்டாட, உன்னைக் கொண்டாட

துன்பமான நெஞ்சில் நீந்தும் சுகமே
கண்கள் துடைத்தாய் என் தாய்யென நீயே
செல்லுகின்ற வழிகளேங்கும் வருவேன்
என்றும் உனது நிழலாய் தொடர்வேனே

அன்பில் கொஞ்சம் சண்டையிட்டு
கட்டிக்கொண்டு முத்தமிட்டு
குட்டி குட்டி குறும்பில் இனிக்கிராய்

வீசுகின்ற காற்றே நீ போ வேரிடம்
என்னுடைய செல்லம் என் பாட்டில் தூங்கிடும்
கண்ணே நீ கண்ணுறங்கு சித்திரம் போல் உறங்கு
அழகே கண்ணுறங்கு ஆராரிராரோ, ஆராரிராரோ, ஆராரிராரோ



Credits
Writer(s): B. Ajaneesh Loknath
Lyrics powered by www.musixmatch.com

Link