PATHIKATHA THEE

பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்

புது ரமலான் பிறை இங்கு கொடுத்தான் இறை
அவன் அன்பால் நானும் நிறைந்து வழிந்தேன்
உன் போர்வையாய் நான் இருக்கிறேன்
நீ எனை அல்லி தினம் தினம் தினம் போர்த்திடு

பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்
கத்தி பேசும் மொழியை கொலை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்

ஓமனே என் ஓமனே வான் மேகம் தேடும் தாகம் நீ
வானிலே வரும் வெண்ணிலா தினம் அல்லி போகும் மோகம் நீ
இன்னும் கொஞ்சம் இந்த கொஞ்சல் நீளுமா
நீராடு நீ என் உடல் என்னும் கடலுக்குள் இரவளம்
நீராடு நீ என் உயிர் சூழல் ஆழத்தில் ஓடி நீ மூல்குவாய்
நடுநிசி சூழலை எய்குவாய் நான் தான் கரைந்துரைய
உதிருதே உடலின் மென்மைகள் தான்
பதறதே பாவம் பாவை உடல்

தண்ணீர் பிறையில் தகிக்கும் மீனானேன்
பண்ணீர் அமிழ்தம் கசியும் பூவானேன்
ஈர மணலில் நுழையும் நீரானேன்
காடு கடல்கள் பருகும் பசியானேன்

என் நிலை கண்டு நீ பேய் மழை பெய்திடு
நனைந்தாலும் ஏன் காய்கிறேன் நான்
இடாமலே எனை விழுங்கிடு
கடல் குறுகி நதி குறுகி துளி ஆகட்டுமே

வாடை தாண்டி கூடை கூட தீர்ந்திடாத ஜம் ஜம் நீ
தூது தந்த தூயனே என் பூரணத்தின் அம்சம் நீ
உன்னில் என்னை ஊற்றி ஊற்றி தேக்கினேன்

பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்



Credits
Writer(s): A.r. Rahman, Snekan
Lyrics powered by www.musixmatch.com

Link