Siragaatchi Poove - From "Idi Minnal Kadhal"

நெஞ்சே நெஞ்சே நெஞ்சின் ஆசை கேளாயோ
பஞ்சோ பஞ்சோ காதல் பஞ்சம் தீர்ப்பாயா

ஓ சிறகாட்சி பூவே பூவே
எனை வீழ்த்தி போகும் தீயே
இருளெங்கும் ஒளியாய் வீசும் என் மின்னலே
ஒரு கோடி நிலவின் தீவே
உதிராமல் பூத்த பூவே
கடிகார இமையால் பேசும் நம் காதலே
ஏ மின்சாரமாய் நீ எந்தன் மின்சாரமாய் மொத்தத்திலே

தஞ்சே தஞ்சே தஞ்சம் கொள்ள வந்தாயா
அஞ்சே அஞ்சே அஞ்சல் பார்வை தந்தாயா
நெஞ்சே நெஞ்சே நெஞ்சை நீ ஈர்த்தாயா
அன்பே அன்பே ஓருயிர் மீட்பாயோ

மேல் வான கூரையில்
மேயும் குருவிகள் மேலும் மேலும் சலனம்
சேலை மேடையில் மீசை அறிமுகம்
நாளும் நாளும் நடனம்
முகம் பூத்த கன்னத்திலே கை தீண்ட (கை தீண்ட)
முழு மோக முத்தத்தினை கண்டோமே

நெஞ்சே நெஞ்சே நெஞ்சின் ஆசை கேளாயோ
பஞ்சோ பஞ்சோ காதல் பஞ்சம் தீர்ப்பாயா

ஓ சிறகாட்சி பூவே பூவே
எனை வீழ்த்தி போகும் தீயே
இருளெங்கும் ஒளியாய் வீசும் என் மின்னலே
ஒரு கோடி நிலவின் தீவே
உதிராமல் பூத்த பூவே
கடிகார இமையால் பேசும் நம் காதலே



Credits
Writer(s): Kabilan, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link