Butterfly

கண்ணீர் வற்றும் கண்கள் சொல்ல
கதைகள் இங்கே கிடையாதே
இதயம் அது சிதையும் பொழுது
இரவும் பகலும் தெரியாதே

துவளும் நெஞ்சம் அது ஆயிரம் ஆறுதல் கேட்கிறதே
திணரும் பிம்பம் அதை யார் என்று நீ சொல்?
இசை இல்லாமல் கவிதை வானொலி ஏறிடுமா?
குறை சொல்லாமல் பூமியில் வாழ்ந்தவர் யார் தானோ?

ஆரேனோ?
பிழை ஆவேனோ?
கரைசேர்வேனோ?
மனம் சோர்வேனோ?
ஆராரோ
இது மாறாதோ?
வலி ஓயாதோ?
சிறை நீங்காதோ?

பட்டாம்பூச்சி பறந்தே மெல்ல
சூரியன் தீண்டிட துடிக்கிறதே
பட்டாம்பூச்சி பாடல் ஒன்று
கேட்போர் இன்றி தவிக்கிறதே



Credits
Writer(s): Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link