Vizhiyae Kathai Ezhuthu

விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது
இந்த பூவை யார் கொள்வது
பூவைக்கு வேறேது பாஷை
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்
விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காதல் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
உனக்காகவே நான் வாழ்கிறேன்



Credits
Writer(s): Vaalee, M.s. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link