Rasathi

ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல

கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையில
மஞ்சள அறைக்கும் முன்ன மனச அரச்சவளே
கரிசக் காட்டு ஓடை இல கண்டாங்கி தொவைக்கயில
துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளே

நெல்லுக் களத்து மேட்டுல இழுத்து முடிஞ்சி கிட்டு
போறவ போறவ தான் புத்தி கெட்டு போனவதான்
புதுக் கல்யாணச் சேலையில கண்ணீராத் தொடச்சி கிட்டுப்
போறவ போறவதான் பொஞ்சாதியா போறவதான்
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச் சூடி அழுதபடி போறவளே

கடலைக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
கடலைக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல

ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல

தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு வெரல் காயலையே
மறிக் கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையில வாங்கித் தந்த வளவி ஓடையலையே
மல்லு வேட்டி மத்தியில மஞ்சக் கர மாறலையே

அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும்
பார்ப்ப தெப்போ(பார்ப்பது பார்ப்ப தெப்போ பௌர்ணமியும் வாரதெப்போ)
அந்தக் கொலுசு மணி சிரிப்பும் கொமரி இலஞ் சிரிப்பும்
கேட்ப தெப்போ (கேட்பது கேட்ப தெப்போ கீரைத்தண்டு பூப்பதெப்போ)

கருவேலங் காட்டுக் குள்ள கரிச்சான் குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா தொணையத் தான் காணோமின்னு

கடலைக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
கடலைக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல

ராசாத்தி என் உசுரு என்னுதில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போற புள்ள



Credits
Writer(s): A R Rahman, N/a Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link