Soora Theynga

சூர தேங்கா ஒடச்சு முடிச்சதும்
நாங்க எடுப்போம் auto'வ தான்
ஊரில் உள்ள பேட்டை எல்லாத்துக்கும்
நாங்க இப்போ நாட்டாமை தான்

வாழ்க்கையிலே பாதி நாளு
கம்பி எண்ணி வாழ்ந்துப்புட்டேன்
மீதி உள்ள நாள எல்லாம்
சாதிக்க தான் வாழப்போறேன்

காதல் வேணாண்டா கல்யாணம் வரைக்கும்
உழைப்பேன் கை காலு உள்ள வரைக்கும்
மேடு பள்ளங்கள் எல்லாம் இருக்கும்
மிதிச்சு மேலே வா வெற்றி கிடைக்கும்

சூர தேங்கா ஒடச்சு முடிச்சதும்
நாங்க எடுப்போம் auto'வ தான்
ஊரில் உள்ள பேட்டை எல்லாத்துக்கும்
நாங்க இப்போ நாட்டாமை தான்

மோதி பாரு மலை கூட சாயும்
அணைகள் ஒடச்சு காவேரி பாயும்
தீயும் கூட ice'ஆக மாறும்
நாளை வருமே நம்மோட காலம்

கூரை ஏறி கோழி பிடிக்க
கூச்சம் ஆனது அந்த காலம்
வானம் ஏறி நிலவை கீறி
வாழ பாக்குது இந்த காலம்

வாடா சரி சரி வாடா
சரி சரி வாடா
புதிய வாழ்க்கைக்கு போராடலாம்
மஞ்சள் குதிரை வருது
ஜோராக பயணம் போலாம் ஏரிக்கோங்க
Meter மேல பைசா தரவேண்டாம்
மின்மினி இல்ல மின்னல் நாங்க

சூர தேங்கா ஒடச்சு முடிச்சதும்
நாங்க எடுப்போம் auto'வ தான்
ஊரில் உள்ள பேட்டை எல்லாத்துக்கும்
நாங்க இப்போ நாட்டாமை தான்

வாஸ்து பாத்து வானில் நிலவு இருக்காது
நேரம் காலம் பாத்தா எதுவும் நடக்காது
ஆப்பிள் விழுந்தாலும் ஓடி போய்
எடுத்து தின்னாம யோசிச்சார் Newton
ஈர்ப்பு விசை'நா என்னனு தான்
சொன்னார் அவர் தாண்டா நம்மோட பாட்டன்

ஏழு ஜென்மம் உள்ளதென்று யாரோ சொன்னாங்க
நீ இப்போ நம்பாதேடா ஆமாண்டா
ஹே வானம் பொழியும் பூமி விளையும்
யாரும் யாருக்கும் அடிமை இல்ல
கருடன் பாத்த காண குருவி போல
பரடா வாழ்கையில

சூர தேங்கா ஒடச்சு முடிச்சதும்
நாங்க எடுப்போம் auto'வ தான்
ஊரில் உள்ள பேட்டை எல்லாத்துக்கும்
நாங்க இப்போ நாட்டாமை தான்

வாழ்க்கையிலே பாதி நாளு
கம்பி எண்ணி வாழ்ந்துப்புட்டேன்
மீதி உள்ள நாள எல்லாம்
சாதிக்க தான் வாழப்போறேன்



Credits
Writer(s): Viveka, P.b. Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link