Kai Pesi

கைப்பேசி எண் கூடச் சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை

அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே
கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே
யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்லக்கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்

கைப்பேசி எண் கூடச் சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை

இதயத்தில் யார்க்கும் இடம் இல்லை என்று
தினசரி தாள் போட்டு நான் பூட்டினேன்
உடைத்து அதை நீயே உள்புகுந்தாயே
தலைவிதி உன் கையில் நான் மாட்டினேன்

உலகெல்லாம் உறங்கையில்
உயிரை நீ தயிரைப் போல் கடைகிறாய்
உணர்ச்சியில் கிறங்கையில்
மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய்
ஓ-ஒ-ஓ-ஓ-ஒ-ஓ-ஒ-ஓ-ஒ-ஓ

எனக்கென நீதான் எழுதிடும் கடிதம்
படிக்கிறேன் அன்பே உன் facebook-ல் தான்
அடிக்கடி நான் தான் நிலைதடுமாறி
விழுகிறேன் கண்ணே உன் grace look'ல் தான்

விடையில்லா கேள்வி நீ
நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய்
தடைகளைத் தகர்த்து நீ
அடிமையை அரசி போல் ஆள்கிறாய்
ஓ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ-ஒ-ஓ-ஒ-ஓ

கைப்பேசி எண் கூடச் சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை

அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே
கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே
யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்லக்கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்

கைப்பேசி எண் கூடச் சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை



Credits
Writer(s): Vaali, Yuvan Shankar Raja, M.s.viswanathan M.s.viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link