Nanban

நண்பன் அருகிருந்தால் கிடையாதே ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியை போலே தேய்ந்தாயே

சோகம் வருகையிலே துணையாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கியும் சுமந்தான்

வா வா நீ இதனை அறியவே...

பாதை அறிவோம் பயணம் கூட அறிவோம்
நேரம் தடுமாற்றம் அறியோம்
கோடை அறிவோம் குளிரும் வாடை அறிவோம்
சூழல் எதை கேக்கும் அறியோம்
ஆடும் படகை அலையில் நாளும் அறிவோம்
அறிந்த போதும் கரையேற அறியோமே
மாறும் எதுவும் மனதை நாமும் அறிவோம்
இருந்த போதும் எதிர்காலம் அறியோமே

நண்பன் அருகிருந்தால் கிடையாதே ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியை போலே தேய்ந்தாயே
நண்பன் அருகிருந்தால் கிடையாதே ஒரு கவலையே
வா வா நீ இதனை அறியவே...

தோளில் இருந்தால் சுமைகள் தானே இறங்கும்
நாமே சுமை ஆனால் பிழையே
வானம் இருந்தால் நிலவு தீபம் கொடுக்கும்
நாமே இருள் ஆனால் குறையே
காலை பொழுதில் நகரம் வேறாய் தெரியும்
நெரிசல் கூடும் தெருவோரம் தொலைந்தோமே
ஆடை சலவை கசங்கி போகாது இருக்க
நகர்ந்து போகும் சில பேரால் கிழிந்தோமே

நண்பன் அருகிருந்தால் கிடையாதே ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியை போலே தேய்ந்தாயே
நண்பன் அருகிருந்தால் கிடையாதே ஒரு கவலையே
மூன்றாம் பிறை நிலவின் ஒளியை போலே தேய்ந்தாயே
சோகம் வருகையிலே துணையாய் இருந்தான்
தோள்களிலே எனை தூக்கியும் சுமந்தான்
நண்பன் அருகிருந்தால் கிடையாதே ஒரு கவலையே
வா வா நீ இதனை அறியவே...

Credits
Writer(s): Yuga Bharathi, Girishh.g
Lyrics powered by www.musixmatch.com

Link