Amma Endralay

அம்மா என்றாலே அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆரோ ஆரிரோ அதை பாடவும் உன்னால் முடியாதோ
யாரோ யார் யாரோ என்றே தாயும் சேய்யும் இருப்பாரோ
விடையே இல்லாமல் இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ
அம்மா என்றாலே அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ

தெய்வமும் நீயும் உண்மைகள் பேசா
ஊமைகள் தானோ சொல் உன் வாழ்வில்
நீ கொண்ட சோகம் நீ கொண்ட மௌனம்
தீர்ந்திடும் நாள் வருமே
அந்தோ உன் தலை மேலே பேரிடிபோல காலனும் வந்தானே
அந்த காலனின் பேரை கேட்கிறபோதோ உன் மகன் பேர்தானே

அம்மா என்றாலே அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ

சேய் குரல் கேட்டால்
தாய் உயிரோடு
ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட
அன்னை இல்லாத
பிள்ளைகள் கண்ணில்
யாரும் இல்லா வெறுமை

மண்ணில் நுண் உயிர்கூட
தன்னுயிர் தந்த தாய் உயிர் தேடாதா
அம்மா உன் மடியோடு
என் தலை சாய்ந்தால்
மாய்வதில் ஓர் சுகமே

அம்மா என்றாலே அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆரோ ஆரிரோ அதை பாடவும் உன்னால் முடியாதோ



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link