Annanenna Thambi Enna (From "Dharma Dhoorai")

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில்
வந்ததிங்கு வேதனையும் சோதனையும்தான்
நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில் தான்
பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்
வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி
எந்தன் நெஞ்சமிங்கு நெஞ்சமில்லடி
காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசையென்ன
நேருக்கு நேர் நின்று ஏய்த்திடும் மோசம் என்ன
ஊருக்கு நியாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன
உண்மையை கொன்றபின் நெஞ்சுக்கு நீதி என்ன
போகும் பாதை தவறானால்
போடும் கணக்கும் தவறாகும்

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

தந்தையின் சொல் நின்று மந்திரம் தான் என்று
கண்டதடி பிள்ளை என்ற உண்மை உள்ளமே
என்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்
இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்
பட்டது பட்டது என் மனம் பட்டதடி
சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி
விட்டது விட்டது கைகளும் விட்டதடி
கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி
வானம் பார்த்து பறக்காதே
பூமியில் பிறந்தாய் மறக்காதே

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

படம்: தர்மதுரை (1991)
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Panchu Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link