Thaavi Thaavi Pogum

தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
அந்த நீர் மேகம் எங்கு போனாலும்
உந்தன் பின்னால் இன்றும் துணையாய் இங்கு தொடராதோ

தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்

விளையாடும் மைதானம் அங்கு பலமாய் கரகோஷம்
வெறும் பந்தாய் நாம் இருந்தால் பல கால்கள் விளையாடும்
நாளை என்ன ஆகும் என்று அறியாமல்
காலை மாலை வேலை தோறும் தூங்காமல்
அதிகாலை நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில்
என் அருகில் வந்து என்னை தொட்டுத் தழுவ

தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்

கடல் அலைகள் நிரந்தரமா அவை ஒவ்வொன்றும் புதிது
அதில் குமிழாய் உரைகளுமாய் வரும் கவலை உடைகிறது
எந்தக் காற்று தீண்டும் என்றா குழல் தேடும்
எந்தக் காற்று நுழைந்தாலும் புது இசை பாடும்
நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனி இல்லை
உன் தனிமைத்தன்னை தனிமையாக்கும் துணைகள்

தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்
அந்த நீர் மேகம் எங்கு போனாலும்
உந்தன் பின்னால் இன்றும் துணையாய் இங்கு தொடராதோ

தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்



Credits
Writer(s): Na. Muthukumar, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link