Bharathi Kannamma

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஒரே ராகம்தனை பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
ஒரே ராகம்தனை பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம்
மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

நிலா காலங்களில்
சோலைகளில் ஆடும் சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில்
ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா

விழாக் காலங்களில் கோவில்
சிலை பாடும் உரை பாடும்
விழாக் காலங்களில் கோவில்
சிலை பாடும் உரை பாடும்
காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
அலைமோதும்படி ஓடும்
நதி நெஞ்சம் இளநெஞ்சம்
அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்
முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா
பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்



Credits
Writer(s): M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link