Thanga Changili

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே
கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன்சேலையில் பூவேலைகள்
உன்மேனியில் பூஞ்சோலைகள்
அந்தி பூவிரியும்
அதன்ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு தணியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ல ல ல ல . லால்ல லால்ல லால்லா
கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளில் நீராடினாள்
அன்பே ஆடை கொடு
என்னை அனுதினம் அள்ளிச் சூடி விடு
இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ



Credits
Writer(s): R Vairamuthu, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link