Maamalai Sabariyil

கன்னிமூல கணபதி பகவானே சரணம்
கந்தனே சிங்கார வேலனே சரணம்
அன்னை மாளிகைபுரத்தம்ம தேவியே சரணம்
ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்
மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம்
கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சந்நிதானம்
பூமகள் மைந்தனின் புண்ணிய சந்நிதானம்
மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்

பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம்-ஆ
பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம்
விதியையும் மாற்றிவைக்கும் வீரனின் சந்நிதானம்
கவலையை போக்கிடும் கணபதி சந்நிதானம்
கவலையை போக்கிடும் கணபதி சந்நிதானம்
அவனி எல்லாம் காக்கும் ஐயப்பன் சந்நிதானம்

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்

நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம்
நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம்
நாளெல்லாம் நமை என்றும் கட்டிகாக்கும் சந்நிதானம்
மாளிகைபுரத்தம்மனின் மனங்கவர் சந்நிதானம்
மாளிகைபுரத்தம்மனின் மனங்கவர் சந்நிதானம்
நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சந்நிதானம்
நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சந்நிதானம்

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்
மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம்

சந்நிதானம் ஐய்யப்பன் சந்நிதானம்
சந்நிதானம் ஐய்யப்பன் சந்நிதானம்
சந்நிதானம் ஐய்யப்பன் சந்நிதானம்



Credits
Writer(s): K Veeramani, John Peter
Lyrics powered by www.musixmatch.com

Link