Kalyaana Maalai (From "Puthu Puthu Arthangal")

யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யான மாலை)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...

(கல்யாண மாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

(கல்யாண மாலை)



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link