Marakka Theriyavilal

மறக்க தெரியவில்லை
எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை
எனது தேவதை

சிறகுகள், முளைக்கும் முன்பே
விலங்கினை, பூட்டிக்கொண்டேன்
என் தேவியே

மறக்க தெரியவில்லை
எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை
எனது தேவதை

காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்
காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னைச் சேராமல் உயிர் வாடி நின்றேன்

உனக்காகப் பாட
இசை கொண்டு வந்தேன்
மௌனங்கள் பரிசாகத் தந்தேன்

சொந்தம் ஆகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்
காதல் மகாராணியே

மறக்க தெரியவில்லை
எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை
எனது தேவதை

உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை
உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தமில்லை

கடல் நீளம் கூட
கரைந்தோடிப் போகும்
என் அன்பில் நிறம் மாற்றம் இல்லை
தேகம் தீயோடு வேகும்போதும்
தாகம் என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி

மறக்க தெரியவில்லை
எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை
எனது தேவதை

சிறகுகள், முளைக்கும் முன்பே
விலங்கினை, பூட்டிக்கொண்டேன்
என் தேவியே



Credits
Writer(s): Adithyan, N/a Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link