Chinna rasavae

சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு

ராசாவே ராசாவே
ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

அக்கா மக பாட்ட கேட்டு
முக்கா முழ பூவ சூட்டு
அக்காலத்து கோட்ட போட்டு
நிக்காதே நீ ரொம்ப late'u

கொஞ்சம் பொறு மானே
கொல்லி மலைத் தேனே
காத்திருக்கேன் மீனே
தூண்டில் இட நானே

அட மாமாவே
வாயா நான் கூட
ஒரு மாமாங்கம்
போச்சே நான் வாட
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு

ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா ஹான்
என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா

தெக்காலதான் மேயும் காத்து
தென்ன மர கீத்த பாத்து
ஒக்காந்துதான் தாளம் போடும்
உன்னுடைய ராகம் பாடும்

உச்சிமலை ஓரம்
வெயில் தாழும் நேரம்
ஊத்து தண்ணி போல
உன் நெனப்பு ஊறும்

சிறு பாவாட
சூடும் பூந்தேரு
இது பூ வாட
வீசும் பாலாறு
அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு

ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு

ரோசாவே ரோசாவே
ரோசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது

அட ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா
என்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குதா



Credits
Writer(s): Ilaiyaraaja, Jey Raghavendra
Lyrics powered by www.musixmatch.com

Link