Kumudhampol (From "Moovendar")

குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்ணனோ
குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்ணனோ

நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் இதழ் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் இதழ் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே
என் மன வீட்டின் ஒரு சாவி நீ தானே
முத்தாரமே மணி முத்தாரமே
குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்ணனோ

பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
தினம் தந்தி அடிக்கின்றதே
தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
நெஞ்சில் மணமாலை மலரே
உன் நினைவென்னும் மணி ஓசையே
தினம் மணி ஓசையே

குமுதம் போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ

ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி

ஆனந்த விகடம் சொல்லு
என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடம் சொல்லு
என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
நான் பாக்யாதி பதி ஆனேன்
உன்னாலே கண்ணே உஷா பசும் பொன்னே உஷா

குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ
குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ



Credits
Writer(s): A. Thavasimani
Lyrics powered by www.musixmatch.com

Link