Kanmoodi

கண்மூடி திறக்கும்போது.
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி,
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பார்த்து,
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து,
இதுதான் காதல் என்றாளே

தெரு முனையை தாண்டும் வரையில்,
வெறும் நாள்தான் என்று இருந்தேன்,
தேவதையை பார்த்ததும் இன்று,
திரு நாள் எங்கின்றேன்
அழகான விபத்தில் இன்று,
ஹையோ நான் மாட்டிகொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்,
வேண்டாம் என்றேன் ...

ஓ ஓ ஓ ஒ ஓ ஓ
ஓ ஓ ஓ ஒ ஓ ஓ

உன் பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அரியுமா .

உயிருக்குள் இன்னோர் உயிரை,
சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் எடையை...,
உணர்கின்றேன் காதல் இதுவா

கண்மூடி திறக்கும்போது.
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே

வீதி உலா நீ வந்தால்
தெரு விளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சுரியனும்...
அடம் புடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கதான்
மழை குதிக்குமே...
பூகம்பம் வந்தால் கூட...
ஓ ஹோ,...
பதறத நெஞ்சம் எனது
ஓ ஹோ,...
பூ ஒன்று மோதியதாலே
ஓ ஹோ,...
பட்டென்று சரிந்தது இன்று
ஓ ஹோ,...

கண்மூடி திறக்கும்போது.
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி,
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பார்த்து,
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து,
இதுதான் காதல் என்றாளே

படம்: சச்சின் (2005)
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள்: நா.முத்துக்குமார்
பாடகர்: தேவி ஸ்ரீ பிரசாத்



Credits
Writer(s): Devi Sri Prasad, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link