Ada Kondaiyam

அட கொண்டையன் கோட்டை முரட்டுபுள்ள
என் கூட வாடி கரும்பு திங்க
குள்ளஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்

பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா
பரோட்டா பரோட்டா நீ குத்தும் பரோட்டா
மல போல் வெலையா இது டயனா வச்ச கடையா

எண்ண தலையழகா எழுத்தாணி மூக்கழாக
கண்ணு வச்சேன் கருப்பழகா
அரிசி பருப்பு வெலய வச்சே நான்
ஆகாசதையே வாங்கிடுவேன்

பரோட்டா பரோட்டா
இது சீம வெல பரோட்டா

கப்பலுல கல்லு வந்து கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா வெள்ளக்காரன் வந்து நிப்பான்யா

உச்சி குடுமி எல்லாம் வச்ச நல்ல கிராப் ஆச்சு
ஒட்டு கோமனமெல்லாம் சட்ட துணியா மாறி போச்சு
தற் குறி கீறல் எல்லாம் தமிழ் எழுத்தாய் ஆகி போச்சு
நாகரீகம் வந்த தாலே நட்பு எல்லாம் உசந்து போச்சு

ஆடி வரும் உன் இடுப்பு மூள போல சிறுத்து இருக்க
தேடி வரும் உன் கடையில் யானை வெல எதுக்கமா
எண்ண தலையழகா எழுத்தாணி மூக்கழாக
கண்ணு வச்சேன் கருப்பழகா

அரிசி பருப்பு வெலய வச்சே நான்
ஆகாசதையே வாங்கிடுவேன்

பரோட்டா பரோட்டா
இது சீம வெல பரோட்டா

கப்பலுல கல்லு வந்து கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா வெள்ளக்காரன் வந்து நிப்பான்யா

டயானா டயானா
டடா டயானா டயானா
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்...
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்...

பல்ல பல்ல இளிச்சு கட்டடத்த சுத்துறீங்க
Over time வேல செஞ்சும் ஓசி பீடி குடிக்கிறீங்க
வீட்டுக்காரி இருக்க வெளிய வந்து ஆடுறாங்க
தாலி பவுன வித்து தண்ணியையும் அடிக்குறாங்க

பள்ளத்துல விழுந்தவங்க பல்லாங்குளிக்கு அஞ்சுறாங்க
பாரி ஜாத பூவிருக்க பட்டமரத்த சுத்துறாங்க
கொண்டையன் கோட்டை முரட்டுபுள்ள
என் கூட வாடி கரும்பு திங்க

குள்ளஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் ஏண்டி வெக்கம்

பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா
பரோட்டா பரோட்டா நீ குத்தும் பரோட்டா
மல போல் வெலையா இது டயனா வச்ச கடையா

கொண்டையன் கோட்டை முரட்டுபுள்ள
ஒன் கூட வாரேன் கூத்துப் பாக்க

குள்ளஞ்சாவடி சந்தை பக்கம்
நாமா கூத்து பாப்போம் போச்சு வெக்கம்

பரோட்டா பரோட்டா
இது சீம வெல பரோட்டா

கப்பலுல கல்லு வந்து கல்லு வச்சு அடுப்பு செஞ்சு
பரோட்டா நான் போட்டா வெள்ளக்காரன் வந்து நிப்பான்யா



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Pulamaipithan, Kamarasan Na, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link