Kadhal Mayakkam (Version 1)

காதல் மயக்கம்... அழகிய கண்கள் துடிக்கும்
இது ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்

தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே ஒரு
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை...
நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா?
மெய்தான் அய்யா
நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா?
மெய்தான் அய்யா
பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
என் பெண்மை திண்டாடும் உன்னோடு மன்றாடும்

காதல் மயக்கம்... அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்

தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
ஒரு காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்

உன் வார்த்தைதானே நான் சொல்லும் வேதம்...
உன் பேரை சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி
வா வா தேவி
உன் பேரை சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி
வா வா தேவி
கண்களில் ஒன்று பார்க்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
நான் வந்து பெண் பார்க்க
நீ அன்று மண் பார்க்க
காதல் மயக்கம்... அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
ஒரு காதல் மயக்கம்

அழகிய கண்கள் துடிக்கும்...



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link