Keesu Keesendru Engum

கீசு கீசென்றெங்கும் கீசு கீச்சென்றெங்கும்
ஆனைச்சாதம் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோ ரெம்பாவாய் ஆஆஆ...



Credits
Writer(s): Traditional, Aandal
Lyrics powered by www.musixmatch.com

Link