Puthiya Ulagai (From "Yennamo Yedho")

புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு

மார்பில் கீறினாய் ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய் எனை இன்னும் உயரமாக்கினாய்
உன் விழி போல மண்ணில் எங்கும் அழகி இல்லை என்றே
உன் விழி இங்கே கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நாளும் காணும் ஆசையில்
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு

யாரும் தீண்டிடா இடங்களில் மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்
உன் மணம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்
உன் மணம் இன்று வேண்டாம் என்றே பறந்து எங்கோ சென்றேன்
வேறோர் உலகம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு

Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Imman David
Lyrics powered by www.musixmatch.com

Link