Mampoove Siru Mainave

மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜா செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா

புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு
சத்தங்கள் கொண்டாட
சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு
சங்கீதப் பண் பாட
கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல்
பின் புறம் நின்றாட
கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம்
பல்லக்கு ஒன்றாட
{அழகான மான்
அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ} (ஓவர்லாப்)

மாம்பூவே சிறு மைனாவே
நான் மச்சானின் பச்சைக் கிளி
தொத்திக் கொள்ள தோள் கொடுத்தான்
எனக்கது சுகமாக இருக்குது
ஆ.என் மனம் எங்கெங்கோ பறக்குது

மஞ்சக் குருத்து
பிஞ்சுக் கழுத்து
மன்னவன் பூச் சூட
மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம்
மஞ்சத்தில் முத்தாட
அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில்
சந்திக்கச் சொன்னதென்ன
என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன்
சிந்திச்சு நின்னதென்ன
மடல் வாழை மேல்
குளிர் வாடை போல்
அவனோடு நானாடும்
பொழுதெல்லாம் தேன்

மாம்பூவே சிறு மைனாவே

நான் மச்சானின் பச்சைக் கிளி

தொத்திக் கொள்ள தோள்கொடுத்தான்

எனக்கது சுகமாக இருக்குது

என் மனம் எங்கெங்கோ பறக்குது

ஆண்: என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
என் மனம் எங்கெங்கோ பறக்குது
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ



Credits
Writer(s): Vaalee, M.s. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link