Agasatha - From "Cuckoo"

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இவதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணு படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நனவாகும் கனவே அருகிலே
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே

மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வனங்களே
தமிழே... தமிழே...
வருவேனே உன் கரமாய்
கொடியே... கொடியே
அழுறேனே ஆன்ந்தமாய்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

காம்பத் தேடும் குழந்தையா
உன்னைத் தேடும் உசிரு பசியில
கோடிப் பேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில

பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா... அழகா
குயிலாவேன் உன் தோளில்
அழகி... அழகி
இது போதும் வாழ்நாளில்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

கண்ணால எதையும்
காணாத இமைதான்
கண்ணீரப் பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உலக
உன்னால பாப்பேனே



Credits
Writer(s): Yuga Bharathi, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link