Yae Pulle Karuppaayi

ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மி கல்லும் ஆடுதடி

ஒட்டகுடி வாசலிலே
ஊதகாத்து வீசுதடி
பட்ட மரம் காய்க்குதடி
பாழும் மனம் சொக்குதடி

ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மி கல்லும் ஆடுதடி

சுட்ட வாழை கருவாடு
சூடு கொஞ்சம் ஏத்துதடி
முட்ட வச்ச கறிகொழம்பு
மூளையத்தான் மாத்துதடி

அத்தை பெத்த முத்து பெண்ணே
அங்கே இங்கே போவாதே
பச்சமணம் கொண்டவளே
பாவி மக வாயேண்டி

ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மி கல்லும் ஆடுதடி

அள்ளாம கொறையாது
கிள்ளாம வலிக்காது
வெள்ளத்தில இறங்காமல்
நீந்தவும்தான் முடியாது

மாலை நேரம் வந்தாச்சினா
இது போல ஒரு குழப்பம்
மாறுனாலும் மறு நாளும்
இதுதானே என் வழக்கம்

ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அன்பே உன்ன தேடுதடி

அன்பே உன்ன தேடுதடி
அன்பே உன்ன தேடுதடி



Credits
Writer(s): S.a. Rajkumar
Lyrics powered by www.musixmatch.com

Link