Kaatrinile

ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

காற்றினிலே...
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலமெனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ... இக்கரையோ...

காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலமெனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ... இக்கரையோ...

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது
யாரிடத்தில் கேள்வி கேட்பது
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது
தர்மமே மாறுபட்டால் எங்கு செல்வது

ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ... இக்கரையோ...

ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேஷமென்னவோ
ஆட விட்டு பாடுவான் மூடு திரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதையவன் பாதை அல்லவோ...

ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ... இக்கரையோ...



Credits
Writer(s): Kannadhasan, G Devarajan
Lyrics powered by www.musixmatch.com

Link