En Kannukoru Nilava (From "Araro Ariraro")

ஆ-ஆ-ஆ-அ-ஆ
ஆ-ஆ-ஆ-அ-ஆ

என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னைப் படைச்சான்

உன் கண்ணுக்கொரு நிலவா என்னைப் படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னைப் படைச்சான்

ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

உன் கண்ணுக்கொரு நிலவா என்னைப் படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னைப் படைச்சான்

ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-அ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-அ

உச்சிவெயில் வேளை நீ நடக்க
பிச்சிப்பூவ நானும் பாய் விரிக்க
உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க
முக்குளிக்க நானும் ஏங்குறேன்
முத்தெடுக்க நேரம் பாக்குறேன்
கொஞ்சம் பொறு இரவு ஆகட்டும்
வெக்கமது விலகி ஓடட்டும்
எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்
மொட்டுத் தான் விட்டுத்தான் பூத்திருக்கேன்

என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னைப் படைச்சான்

ஏ-தந்-நந்-நா
தா-நா-நே-தந்-நந்-நா
தா-நா-தா-நே-தந்-நந்-நா
ஏ-ஹே-ஹே-ஏ-ஹே-ஹே
ஏ-தந்-நந்-நா
தா-நா-நே-தந்-நந்-நா
தா-நா-தா-நே-தந்-நந்-நா
ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
த-நந்-ந-தா-நே-தா-நா-தா-நே
ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
த-நந்-ந-தா-நே-த-நந்-ந-தா-நே
ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே

பள்ளியறை பாட்ட நீ படிக்க
பக்க மேளம் போல நான் இருக்க
தட்டுறப்ப தாளம் பிறந்திருக்க
தட்டத் தட்ட மோகம் வளர்ந்திருக்க
கொஞ்சுறப்போ தேகம் நோகுமா
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா
காயத்துக்கு களிம்பு பூசவா
ஆறும் வரை விசிறி வீசவா
அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்
என்னம்மா கொண்ட நான் இந்த தாகம்

உன் கண்ணுக்கொரு நிலவா என்னைப் படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னைப் படைச்சான்

ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னைப் படைச்சான்



Credits
Writer(s): Valee, K. Bhagyaraj
Lyrics powered by www.musixmatch.com

Link