Kalyanamam Kalyanam

காதல் கண்மணியே...

கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொண்ணுக்கு கல்யாணம்

ஒன்னா சிரிச்சு மெய்யா பழகி கண்ணால் பேசி காத்துக் கிடந்து
ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து உறங்கிடாமல் கனவும் கண்டு
கடைசி வரைக்கும் வருவதாக கதையும் விட்டாளே
இன்று அதனை எல்லாம் மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே

கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொண்ணுக்கு கல்யாணம்

காதல் கண்மணியே...

கூரச் சேல மடிச்சு கட்டி குங்குமபொட்ட நெத்தியில் வெச்சு
மணவறையில் அவ இருப்பா மகாராணியா
அவள காதலிச்சவன் கலங்கி நிப்பான் அப்புராணியா
கல்யாணம், கல்யாணம், கல்யாணம்

கெட்டி மேளம் காது பொளக்க நாதஸ்வரம் ஓங்கி ஒலிக்க
கச்சேரிய ரசிச்சிருப்பான் ஊரு முன்னால
அவள காதலிச்சவன் கதறிடுவான் ஓசையில்லாம
கல்யாணம், கல்யாணம், கல்யாணம்

சாதி சனத்த வணங்கிக்கிட்டு
சட்டுன்னு சட்டுன்னு சிரிச்சுக்கிட்டு
பரிசுப் பொருள வாங்கி வைப்பா ரொம்ப ஆசையா
அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான் சந்நியாசியா

வகை வகையா சமைச்சு வெச்சு வாழ இலையில் பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டிடுவா photo புடிக்கத் தான்
அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான்

மங்களத் தாலி கழுத்தில் ஆட மந்திர வார்த்த அய்யரும் ஓத
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன் வந்திடுவானே நடு ரோட்டுக்கு
கல்யாணம், கல்யாணம், கல்யாணம்

காதல் கண்மணியே...

கல்யாணமாம் கல்யாணம்
காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
காதலி பொண்ணுக்கு கல்யாணம்



Credits
Writer(s): Yuga Bharathi, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link