Kannaalam

கண்ணாலம் கண்ணாலம் மேளம் கொட்டட்டும்
நம்மூரு நாதஸ்வரம் மேகம் முட்டட்டும்

கண்ணாலம் கண்ணாலம் வண்ணம் ஏறட்டும்
பொண்ணோட மஞ்சக் கன்னம் செவப்பா மாறட்டும்
பிப்பீப்பீ கெட்டி மேளம் சத்தம் கூடட்டும்
மாப்பிள்ளை காலு தானா ஆட்டம் போடட்டும்

கண்ணாலம் கண்ணாலம் மேளம் கொட்டட்டும்
நம்மூரு நாதஸ்வரம் மேகம் முட்டட்டும்

எந்தன் கை மீது மருதாணி போல்
நெஞ்சில் உனை தானே நான் சூடினேன்
காதல் பெய்கின்ற வண்ணங்களில்
எந்தன் உடை மாற நான் ஆடினேன்

காற்றில் கேட்காத பாடல்கள் கேட்கின்றேன்
கண்கள் இமைக்கின்ற ஓசைக்குள் நான் காண்கிறேன்
கனா ஒரே கனா
நாளெல்லாம் அதே கனா

கண்ணாலம் கண்ணாலம் நெய் மணக்கும்
பந்திக்கு முந்திக்கிட நாக்கு நெனைக்கும்

கண்ணாலம் கண்ணாலம் வாசம் கூடட்டும்
தக்கோலம் ஏலம் கிராம்பு மூக்கத் தாக்கட்டும்
கற்பூரம் போல நெஞ்சு பத்திகிடட்டும்
சந்தோசம் ஊரு பூரா தொத்திகிடட்டும்

கண்ணாலம் கண்ணாலம் நெய் மணக்கும்
பந்திக்கு முந்திக்கிட நாக்கு நெனைக்கும்

நாவை சீண்டாத சுவை ஒன்றிலே
உந்தன் பேர் சொல்ல நாவூற்கிறேன்
தேனில் திண்டாடும் வண்டாகவே
உன்னில் நான் வீழ்ந்து கொண்டாடினேன்

நாசி பேசாத வாசங்கள் உன்னாலே
எந்தன் மூச்சாக ஆவாயா நான் கேட்கிறேன்
வினா ஒரே வினா
உன்னிலும் அதே வினா

மாப்பிள்ளை இதயம் துடிதுடிக்கும்
ராத்திரி கேட்டு அடம்புடிக்கும்
பொண்ணிவ போகிற வேகத்த பாத்து
கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்
கட்டிலுகிப்ப ஜுரம் அடிக்கும்

தாப்பா போட்டு பூட்டும்போது
தாப்பா போட்டு பூட்டும்போது
மாப்பிள்ளை மனசு படபடக்கும்

அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான்
இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா
அவன் தொட்டு பேசவே துடிச்சிடுவான்
இவ முத்தம் வெச்சே முடிச்சிடுவா
அவன் வீரன் போலதான் நடிச்சிடுவான்
இவ கூச்சம் வந்ததா நடிச்சிடுவா

தீண்டல் ஓர் தீண்டல் நீ தீண்டவே
பெண்மை நான் இங்கு கொண்டேனடா
மென்மை என் மென்மை என்னென்று நீ
கண்டு சொல் என்று நின்றேனடா

முத்தம் என்னென்று கேட்கும் என் இதழோடு
உந்தன் இதழ் சேர்த்து நீ சொல்லும் நாள் தானடா
விழா எந்தன் விழா
காதலில் விழும் விழா



Credits
Writer(s): M.m. Keeravaani, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link