Putham Puthu Bhoomi

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்

புத்தம் புது ஓலை வரும்
இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்
பான் பாடும் என் நேரம் கூடும்

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்

என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற வெள்ளம் வானத்தை மறப்பதில்லை
காலம் இன்னும் கூடவில்லை மாலை இன்னும் வாசவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை இப்போது

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்

கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி காலம் கழித்திருப்பேன்
உலகம் அழிகின்ற போதும் உன்னை நினைத்திருப்பேன்
தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருப்பேன்
ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன் இப்போது

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங் கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்
பான் பாடும் என் நேரம் கூடும்

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link