April Maathathil (From "Vaali")

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ
நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா

இதயம் திருடுதல் முறையா
அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா
மொத்தத்தில் கசையடி நூறு
அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா

What's the Charge?
He is stolen my heart
He is stolen my Little heart Your Honor
Is it? Yes Your Honor
For the Thief of Heart IPC says 1000 Kisses in the Honey Dip Lips

நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண
தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா
தப்பித்து நாடு தாண்டி செல்வாயா
இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா
குமரி நீ சொல்லி மறுப்பேனா

நிலா நிலா கைவருமா இல்லை இல்லை கை சுடுமா

ஹல்வா குடுக்காதே
ஹல்வா குடுக்காதே
ஹல்வா குடுக்காதே
ஹல்வா குடுக்காதே

ஹல்வா குடுக்காதே
ஹல்வா குடுக்காதே
ஹல்வா குடுக்காதே
ஹல்வா குடுக்காதே

மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால்
ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய்
மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து
அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்

ஹே கிள்ளாதே என்னை கொள்ளாதே
உன் பார்வையில் பூத்தது நானா
சுடு கேள்வி கேட்டாலும் அணிவார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சு மசியாது புரியாதா
கண்ணாடி வளையாது தெரியாத
கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு
தன் காதல் அது சொல்லும் தெரியாதா
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
உன் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ
நிலா நிலா கைவருமே தினம் தினம் சுகம் தருமே



Credits
Writer(s): Deva, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link