Mudher Kanave

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழித்திருக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா
முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா

கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழித்திருக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

எங்கே எங்கே நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று
சின்ன கண்கள் சிந்துகின்ற

துளிகளில் துளிகளில் உயிர் வளர்த்தேன்
தொலைந்த என் கண்களை
பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து
இதயத்தை எடுத்துவிட்டாய்

இதயத்தை பறித்ததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழித்திருக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

ஊடல் வேண்டாம்
ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல
உயிரிலே உயிரிலே கலந்து விடு

கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை

வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை
தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கணைத்து தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்



Credits
Writer(s): R Vairamuthu, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link