Kondaadu Kondaadu

வாங்கோ... வாங்கோ... வாங்கோ... வாங்கோ...

கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு

கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி வந்து கொண்டாடு
வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு

மழை எல்லாம் கொட்டுது கொட்டுது
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது
விதை எல்லாம் முட்டுது முட்டுது நன்மை விழையாதோ(நன்மை விழையாதோ)

நிலமெல்லாம் நட்டது நட்டது
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது சந்தம் பொழியாதோ(சந்தம் பொழியாதோ)

கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு

செண்பகப்பூ கண்ணடிக்கும் காடுகள் அல்லோ
அழகிய தாழைகளும் மாலைகளும் சோலைகள் அல்லோ
ஓடைகளும் காதலரின் மேடைகள் அல்லோ
வயல்களின் சேறுகளும் காதலர்களின் சந்தனம் மல்லோ

நீரும் நிலமும் பொதுவானது ஊரம் உறவும் உருவானது
உடல் பலம் கொண்டு உழைத்து பிழைக்க
படை பலம் வந்து பகையை முடிக்க
நிலமும் தாயும் எங்கள் கண்களை போல

மழை எல்லாம் கொட்டுது கொட்டுது
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது
விதை எல்லாம் முட்டுது முட்டுது நன்மை விழையாதோ

நிலமெல்லாம் நட்டது நட்டது
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது சந்தம் பொழியாதோ

கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு
நம் நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு

காடு கொண்ட மூங்கில் எல்லாம் நாதஸ்வரம் தான்
அதில் காத்து வந்து வாசிக்குமே ஏழுஸ்வரம் தான்
பறவைகளும் நாங்களும் தான் சேமிப்பது இல்ல
எங்கள் பரம்பரைக்கும் வறுமையில்ல பஞ்சமும் இல்ல

விடிய விடிய விளையாடுங்க
முடிய முடிய சுதி போடுங்க
தெறிக்க தெறிக்க துளி கொட்டுங்க
பறந்து பறந்து பறை கொட்டுங்க
மலையில் மலையில் பிறந்த மாணிக்கம் நாங்க

மழை எல்லாம் கொட்டுது கொட்டுது
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது
விதை எல்லாம் முட்டுது முட்டுது நன்மை விழையாதோ

நிலமெல்லாம் நட்டது நட்டது
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது சந்தம் பொழியாதோ(சந்தம் பொழியாதோ)

கொண்டாடு கொண்டாடு கொட்டிமேளம் கொட்டி கொண்டாடு
பச்சமல கிளிய போல பறந்து பறந்து கொண்டாடு
நாடு நம் நாடு பொன்னு வெளையுற தென்நாடு
ஆயிரம் இருந்தாலும் கடவுளுக்கிது தாய்வீடு

கொண்டாடு கொண்டாடு கும்மி கொட்டி வந்து கொண்டாடு
வித்து ஒண்ணு வெதச்சாக்க முத்து வெளையுது நம் நாடு

மழை எல்லாம் கொட்டுது கொட்டுது
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது
விதை எல்லாம் முட்டுது முட்டுது நன்மை விழையாதோ

நிலமெல்லாம் நட்டது நட்டது
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது சந்தம் பொழியாதோ(சந்தம் பொழியாதோ)

மழை எல்லாம் கொட்டுது கொட்டுது
மலை எல்லாம் சொட்டுது சொட்டுது
விதை எல்லாம் முட்டுது முட்டுது நன்மை விழையாதோ

நிலமெல்லாம் நட்டது நட்டது
விறகெல்லாம் கொட்டுது கொட்டுது
மனமெல்லாம் கிட்டுது கிட்டுது சந்தம் பொழியாதோ



Credits
Writer(s): Vairamuthu, Deepak Dev
Lyrics powered by www.musixmatch.com

Link