Kallil Aadum

கல்லில் ஆடும் தீவே சிறு கலக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை

ஹே கல்லில் ஆடும் தீவே சிறு கலக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

உடலெனும் தேசத்தில் hormone கலகம் வெடிக்கும்
காதலி உன் விழி கண்டும் காணாதிருக்கும்

அடடா உடல் என்பது காமம்
உயிர் என்பது காதல்
இது தான் உன் தேடல்

அன்பே உயிர் தான் என் தேடல்
உடலே என்ன ஊடல்
விரைவில் என் தேடல்

கல்லில் ஆடும் தீவே சிறு கலக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

இயற்கையின் கிளர்ச்சியில்
கொடியில் அரும்பும் முளைக்கும்
இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்

அடடா நீ சொல்வது கவிதை நீராட்டுது செவியை
தாலாட்டுது மனதை
நிலவே நான் என்பது தனிமை நீயென்பது வெறுமை
நாம் என்பது இனிமை

கல்லில் ஆடும் தீவே சிறு கலககார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

பூக்களுக்கு உன் காய்ச்சல் எல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம் பெண்ணே நீ ஏனில்லை

கல்லில் ஆடும் தீவே சிறு கலககார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால் என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால் என் பருவ காற்றே மாறும்
என்னை நீங்கி சென்றால் என் இளமை காய்ச்சல் ஏறும்

Credits
Writer(s): G. V. Prakash Kumar, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link