Vasiyakaara (From "Pudhiya Geethai")

வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாளே
வசியக்காரி வசியக்காரி வளைச்சு போட்டு போறாளே

ஏனோ ஏனோ உடல் வேகுதடி
ஏனோ ஏனோ உயிர் நோகுதடி
ஏனோ ஏனோ பறி போகுதடி
யெ யெ யெ வைக்காதே மை மை

வசியக்காரா வசியக்காரா வசியமூட்ட போறேண்டா
வசியக்காரா வசியக்காரா ருசிய காட்ட போறேண்டா

ஏனோ ஏனோ உடல் வேகுதடா
ஏனோ ஏனோ உயிர் நோகுதடா
ஏனோ ஏனோ சுகம் ஊருதடா
யெ யெ யெ வைப்பேனே மை மை

உடலை உனதுடலை நான் அடிமை செய்ய வந்தேனே
உயிரை எனதுயிரை உன் இளமைக்கென்று தந்தேனே
பருவம் என்னும் கடையில் என்னை அடகு வைத்து சென்றாயே
வெறி மிகுந்த முத்ததாலே மூழ்கடித்து கொன்றாயே

காதல் என்றும் தும்மல் போல
காமம் என்றும் விக்கல் போல
தழுவ தழுவ இதயம் நழுவியதே
வைக்காதே மை மை

வசியக்காரா வசியக்காரா வசியமூட்ட போறேண்டா
வசியக்காரா வசியக்காரா ருசிய காட்ட போறேண்டா

இரவை நள்ளிரவை உன் உரிமை என்று கொண்டாடு
அழகை உனதழகை நீ அள்ளி தந்து திண்டாடு
புடவை எங்கும் புதுமை செய்ய பூப்பறித்து கொண்டயே
உடை களைந்து என்னில் உன்னை ஒப்படைத்து நின்றாயே

மார்பு மீது மெத்தை போடு
ரோமத்தாலே வித்தையாடு
விடிய விடிய விரதம் முடிகிறதே
வைப்பேனே மை மை

வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாயே
வசியக்காரி வசியக்காரி வளைச்சு போட்டு போறாயே

ஏனோ ஏனோ உடல் வேகுதடி
ஏனோ ஏனோ உயிர் நோகுதடி
ஏனோ ஏனோ பறி போகுதடி
யெ யெ யெ வைக்காதே மை மை

வசியக்காரா வசியக்காரா பசியமூட்டி போறேண்டா
வசியக்காரி வசியக்காரி வளச்சு போட்டு போறாயே



Credits
Writer(s): Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link