Jillena Veesum

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா...
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம் தான்
ஓவியம் ஆனது அப்போது தானா...

வின் மின்கள் யாவும் அன்று பல கண்களாக மாறி
நமை உற்று பார்த்த போது தானா...
நம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி
மெல்ல தொட்டு கொண்ட போது தானா...

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா...
ஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம் தான்
ஓவியம் ஆனது அப்போது தானா...

ஹா... தலையணை உள்ளே அன்று
நான் பறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா...
ஹா... உலுக்கிய போது அன்று
என் உடைகளில் உந்தன் பார்வை உதிர்ந்த பொழுதா...

மணல்வெளியில் பாதம் கோடி
உன் சுவடை பார்த்த போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ...

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா...

ஹா... மழை துளி எல்லாம் அன்று
பல நிறங்களில் உந்தன் மீது விழுந்த பொழுதா...
ஹா... பனித்துளி உள்ளே அன்று
ஓர் அழகிய வானம் கண்டு ரசித்த பொழுதா...

குளிர் இரவில் தென்றல் தீண்ட
உன் விரல் போல் தெரிந்த போதா
எப்போது என்னில் கலந்தாய் நீ...

ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்
ரகசியம் சொன்னது அப்போது தானா...



Credits
Writer(s): Mani Sarma, Lalitha Anandh
Lyrics powered by www.musixmatch.com

Link