Pallangkuzhien

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு

தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா

செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
பல சில்லரை சிதறிவிடும்
செலவு செய்ய நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்

அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரே உனக்கு உபயம் எதற்கு ஆராய்சி

இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

Credits
Writer(s): Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link